ஆனந்தபுரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆனந்தபுரத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71வது பிறந்த நாளையொட்டி திமுக கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஜோசப் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் ஆறுமுகபெருமாள், அயலக அணி மாவட்ட தலைவர் அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலரும், பழங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் நெல்சன் வரவேற்றார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்குரைஞர் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.
இதில் மாவட்ட திமுக பிரதிநிதி வேல்துரை, ஒன்றிய துணை செயலர் ஜாக்குலின், கிளை செயலர்கள் முருகன், இஸ்ரவேல், இரட்டை முத்து, மாரியப்பன், முருகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளை செயலர் ஞானசேகர் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment