நாசரேத் - திருமறையூரில் திருமறை திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 31 March 2024

நாசரேத் - திருமறையூரில் திருமறை திருவிழா.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 31, நாசரேத், திருமறையூர் சேகரம் மறுரூப ஆலயத்தில் வைத்து "திருமறையூரில் திருமறை திருவிழா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 


கிறிஸ்தவர்களின் புனித நூலான திருமறையை கைகளினால் எழுதுகின்ற சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேதாக நண்பன் ஊழியத்தின் மூலம் வீர சுவாமிதாஸ் அவர்கள் நடத்தினார்கள். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை அவர்கள் ஜெபிக்க இந்நிகழ்ச்சி ஆரம்பமானது. 


திருமறையூர் சபை மக்கள் மற்றும் நாசரேத்தின் சுற்று வட்டாரத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருமறையை கைகளினால் எழுதினார்கள். முதல் அமர்வில் வீர சுவாமிதாஸ் அவர்கள் திருமறையை கைகளினால் எப்படி எழுத வேண்டும் என்ற பயிற்சியை அளித்தார்கள். 


இரண்டாம் அமர்வு திருமறையூர் சேகரத் தலைவர் ஜாண் சாமுவேல் அவர்கள் ஜெபிக்க ஆரம்பமானது. இரண்டாம் அமர்வில் மக்கள் எல்லாரும் திருமறையை கைகளினால் எழுதினார்கள். மதிய உணவிற்கு பின்னரும் மக்கள் உற்சாகமாய் கலந்து கொண்டு திருமறையை எழுதினார்கள். 


பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ், சேகர செயலாளர் ஜான்சேகர், சேகர பொருளாளர் அகஸ்டின், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவன், ஆசீர் துரைராஜ், ஜோயல், ஆலயப் பணியாளர் ஆபிரகாம், சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆகியோருடன் இணைந்து சேகரத் தலைவர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad