தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், மார்ச் 31, திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாசரேத் வட்டார அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
அதன்படி இவ்வருடம் நாசரேத் சுற்று வட்டார அளவிலான, 13 வது ஆண்டு (டென்னிஸ் பந்து) TRANSFIGURATION CUP கிரிக்கெட் போட்டி திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் உள்ள மைதானத்தில் வைத்து கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
இதில் நாசரேத், தைலாபுரம், பாட்டக்கரை, பிள்ளையன்மனை, கடையனோடை, பிரகாசபுரம், மாதாவனம், TKC நகர், ஞானராஜ் நகர், அகப்பை குளம், வாழையடி பகுதிகளில் இருந்து கஸ்தியார் லேத், ட்ரீம் பாய்ஸ், ஜாலி குரூப்ஸ், ராஜா டீம், அஜித் டீம், நியூஸ் கிளப் மணிநகர் உட்பட 13 அணிகள் கலந்து கொண்டன.
இன்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தைலாபுரம் மற்றும் ட்ரீம் பாய்ஸ் அணிகள் விளையாடின, முதலில் பேட் செய்த தைலாபுரம் அணியினர் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 85 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர், தொடர்ந்து விளையாடிய ஞானராஜ் நகர் ட்ரீம் பாய்ஸ் அணியினர் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 86 ரன்களை இரண்டாவது பேட்டிங்கில் ஐந்து விக்கெட் இழந்து வெற்றி பெற்றனர்.
அதை தொடர்ந்து மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் திருமறையூர் ஆலய குருவானவர் அருட்திரு. ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து வைத்தார். திருமறையூர் அணியினர் நான்காம் பரிசாக ரூபாய் 1000மும் கோப்பையும், அகப்பைகுளம் அணியினர் மூன்றாம் பரிசாக ரூபாய் 2000மும் கோப்பையும், தைலாபுரம் அணியினர் இரண்டாவது பரிசாக ரூபாய் 3000மும் கோப்பையும், ஞானராஜ் நகர் ட்ரீம் பாய்ஸ் அணியினர் முதல் பரிசான ரூபாய் 5000 மற்றும் வெற்றிக்கோப்பையினை அணியினர் பெற்றுக் கொண்டனர்.
இப்போட்டிக்காண பரிசுத்தொகையினை திருமறையூரை சேர்ந்த W.தேவதாஸ், அகஸ்டின், TDS.ஜெயபால், சன் லைட் பில்டர்ஸ் ஹென்ஷன் ஆகியோர் வழங்கினர். நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல், ரதீஷ், ஜான்சேகர், சேனாபதி ராஜா, அசோக் ஜெனிபர் ஆகியோர் வெற்றிக்கொப்பை மற்றும் மெடல்களை வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மறுரூப ஆலய சபை ஊழியர் ஸ்டாலின் ஜான்சன் துரை நிறைவு ஜெபம் செய்து வைத்தார், கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை திருமறையூர் வாலிபர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment