திருஇருதய ஆண்டவர் கெபியில் காலை 11.30 மணிக்கு நன்றி வழிபாடு தொடங்கியது, நன்றி வழிபாடு முடிந்தவுடன் மதியம் 12.00 மணிக்கு திருப்பலி தொடங்கியது, தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி.சகாயம் அடிகளார் திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி பணியகத்தின் அருட்பணியாளர், ஸ்டார்வின் அடிகளார் மறையுரை வழங்கினார்கள், ஆலந்தலை பங்கு தந்தை அருட்பணி.சில்வெஸ்டர் அடிகளார் வழிபாட்டில் கலந்து கொண்ட அருட்தந்தையர்களுக்கும்,இறைமக்களுக்கும் நன்றி கூறினார்கள், வழிபாடு நிறைவேறியவுடன் இறைமக்கள் அனைவருக்கும் ஆலந்தலை ஊர் நல கமிட்டி மற்றும் திரு இருதய சபையினர் அசன விருந்து வழங்கினார்கள்.
இவ்வழிப்பாட்டில், பாண்டிச்சேரி இறைமக்கள் பங்கு தந்தையோடு,கலந்து கொண்டனர், ஆலந்தலை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் நாசரேத் இறைமக்களோடு ஆயிரக்கனக்ககோர் கலந்து கொண்டனர்.
- MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
.jpg)
No comments:
Post a Comment