துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் விளையாட்டு திடலில் 2 நாள்கள் தூத்துக்குடி மாவட்ட சீனியர் ஆண்கள், பெண்கள் 38வது மாவட்ட சேம்பியன்ஷிப்க்கான கபாடி போட்டி துவங்கியது.
ஆண்களுக்கான கபடி போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் துவக்கி வைத்தார், பெண்கள் கபடி போட்டி நாளை ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதலாவது பரிசாக 50,000 ரூபாய், 2வது பரிசாக 30,000 ரூபாய் மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக 20,000 ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது. துறைசார்ந்த வீரர்கள், வீராங்கனைகள் விளையாட அனுமதி இல்லை.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடிக் கழக தலைவர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் சகோ. மோகன் சி. லாசரஸ் முன்னிலையில் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம் ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கபடிவீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக நடுவர் குழு நடுவர் குழு சேர்மன் கண் ணன், கன்வீனர் மைக்கேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment