தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான ஆண், பெண் கபடி சாம்பியன்ஷிப் போட்டி! கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான ஆண், பெண் கபடி சாம்பியன்ஷிப் போட்டி! கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான ஆண், பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் அணி முதல் இடத்தையும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதல் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக்கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் ஏலீம் விளையாட்டுத்திடலில் 2 நாள்கள்  தூத்துக்குடி மாவட்ட சீனியர் ஆண், பெண் 38-வது மாவட்ட சாம்பியன்ஷிப்க்கான கபாடி போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான கபடி போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்  துவக்கி வைத்தார்.


ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் பெண்கள் பிரிவில் 12 அணிகளும் விளையாடியது. ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் அணிமுதல் இடத்தையும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதலிடத்தையும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு முதல்பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை தூத்துக்குடி அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை கோவில்பட்டி அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000 -த்தை ஓட்டப்பிடாரம், புன்னக்காயல் அணிகளும் மற்றும் கோப்பைகளையும் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.


போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு முதல் பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை விளாத்திக்குளம் அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை ஓட்டப்பிடாரம் அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000-த்தை கயத்தார், ஸ்ரீவைகுண்டம் அணிகளும் மற்றும் கோப்பைகளையும் திருச்செந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் வழங்கினார்.


பரிசளிப்பு விழாவில் கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், வழக்கறிஞர் செல்வக்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், ஆத்தூர் சதீஷ்குமார் எஸ்.ஜே.ஜெகன், சாகுல் ஹமீது, இசக்கி பாண்டியன் கபடி கந்தன், ஒன்றிய திமுக பொருளாளர் பாதாளமுத்து, மாவட்ட பிரதிநிதி கலைய ரசு, ஓய்யான்குடி கிளைக்கழகச் செயலாளர் கிருபை ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடிக் கழகத் தலைவர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் சகோ.மோகன் சி.லாசரஸ் முன்னிலையில் செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கபடிவீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக நடுவர் குழு சேர்மன் கண்ணன், கன்வீனர் மைக்கேல் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad