தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 24வது தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் 25.2.2024 அன்று நடைபெற்றது போட்டியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர்.
இப்போட்டியின் தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். இதில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். கட்டா பிரிவில் 20 தங்க பதக்கத்தையும், 11 வெள்ளி பதக்கத்தையும் 17 வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருமான பேட்ரிக் ஆண்டனி விஜயன் பள்ளி ஆசிரியர்கள் கேத்தரின், பாலா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment