நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் என்எஸ்எஸ் சிறப்பு முகாமின் துவக்க விழா திரவியபுரத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆசிரியர் ஜான் வெஸ்லி வரவேற்றார். இதில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், துணை தலைவர் அருண் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment