சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீசாரதா திருஇருதய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தொழிலதிபர் ரஜிலா அந்தோணிசெல்வன் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பேசினர்.
உதவி ஆசிரியை ஜேஸ்பின் மேரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தனபால், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் அமலேற்பமேரி நன்றி கூறினார்.
- நிக்சன், செய்தியாளர் நாசரேத்.

No comments:
Post a Comment