சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் 53வது தேசிய பாதுகாப்பு தின விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 March 2024

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் 53வது தேசிய பாதுகாப்பு தின விழா.


துாத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டிசிடபிள்யூ நிறுவனத்தில் 53வது தேசிய பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.  நிறுவனத்தின் உதவித்தலைவர் (உற்பத்தி) சுரேஷ், தலைமை தாங்கி பாதுகாப்பு கொடியை ஏற்றி வைத்தார். பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.  டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) கோ.ஸ்ரீனிவாசன் தலைமை உரை ஆற்றினார். 

பாதுகாப்பு துறையின் தலைவர் சி. ஆல்விஸ் கிப்ட் 2023ம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆண்டறிக்கையை சமர்பித்தார். இவ்விழாவில் Mutual Aid Company-யான ஸ்பிக் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உள்ள மூத்த பொது மேலாளர்கள், பொதுமேலாளர்கள், அனைத்து துறை தலைவர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad