இந்நிகழ்ச்சியில் சாத்தான்குளம் வட்டார்சியாளர் திருமதி. இசக்கி முருகேஸ்வரி வாக்காளர் விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார். மேலும் துணை வட்டாச்சியாளர் (தேர்தல் பிரிவு) கோமதி சங்கர் மற்றும் வட்டார கிராம அலுவலர்கள் இந்நிகழ்ச்சியால் கலந்து கொண்டனர். கல்லூரியயின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ரூஸ் கென்னடி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இளையோர் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வேல்ராஜன் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேர்தல் சார்ந்த வினாடி வினா போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சான்றிதடும் வழங்கப்பட்டது. மேலும் இற்நிகழ்வில் துணை வட்டாச்சியர் தாகிர் அகமத், நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் சுந்தர் பேபி, இசக்கி முத்து, கன்னிராசர் ஆலன் சோசுவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முந்நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணாக்கர்கள் இதில் கலந்து கொண்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment