திருச்செந்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 March 2024

திருச்செந்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி சென்னையில் உள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி JAAC வருகின்ற 06.03.2024 அன்று நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் அன்றைய தினம் நீதிமன்ற வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதென்றும் JAAC கேட்டு கொண்டுள்ளது.


அதன்படி திருச்செந்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் திருச்செந்தூர் நீதிமன்ற வாயில் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து திருச்செந்தூர் நீதிமன்றம் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செந்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கு.ஜேசுராஜ் தலைமமையிலும் துனைத்தலைவர் முருகபெருமாள், பொருளாளர் சூசை மைக்கேல் ராஜசேகர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


செயலாளர் பெ.முத்துக்குமார் நன்றி கூறினார்.  இந்த  ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், எட்வர்ட் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்.

No comments:

Post a Comment

Post Top Ad