தூத்துக்குடி - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 March 2024

தூத்துக்குடி - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் - 06, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு, தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 



புதுக்கோட்டை பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் முடிவைத்தானேந்தல் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாடசாமி (42) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 


இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா புலன் விசாரணை செய்து கடந்த 11.07.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் இன்று (06.03.2024) குற்றவாளியான மாடசாமி என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் முத்துலட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad