சாத்தான்குளம் அருகே உள்ள அதிசயபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சித்திரைகலா(55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். குழந்தைகள் இல்லாததாலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் அடைந்து வந்தார். இதனால் இவர், ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் லூர்துமணி மற்றும் அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உதவுமாறு முறையிட்டார். அதன்பேரில் ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில் மாநில செயலர் லூர்துமணி, அப் பெண்ணுக்கு உதவித்தொகையாக ரூ.10ஆயிரம், மற்றும் 10 கிலோ அரிசி. சேலை வழங்கினார்.
அப்போது தெற்கு வட்டார காங்கிரஸ் பொதுச் செயலர் ஜான் ஆசிரியர், அதிசயபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் உதயமணி, வட்டார துணைத் தலைவர்கள் அனகணேசன், செல்வ ஜெகன். வட்டார செயற்குழு உறுப்பினர் சந்தன திரவியம், கிராம காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் மாணிக்கராஜ், அதிசயபுரம் மகளிர் காங்கிரஸ் தலைவி வசந்தா, வட்டார மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெபா, பொருளாளர் லட்சுமணன் மற்றும் மகளிர் நிர்வாகி மனோன்மணி, ஞானமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- நிக்சன், செய்தியாளர், நாசரேத்.

No comments:
Post a Comment