திருச்செந்தூர் அருகே கப்பலுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயம் கண்டுபிடித்துத்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 March 2024

திருச்செந்தூர் அருகே கப்பலுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயம் கண்டுபிடித்துத்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்த வாலிபர் கப்பலுக்கு வேலைக்கு சென்றவர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதியிடம் பெற்றோர் மனு.

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டிணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஆல்டிரின் சேவியர் (வயது 32) இவர் மும்பையில் உள்ள மஸ்க் பிலீட் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி இந்திய பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி சாந்தா குரு என்ற கப்பல் எண் 9444742 - I.M.0ல் வேலை செய்து வருகிறார். 


2.3.24 அன்று அவரது வீட்டுக்கு உங்கள் மகன் ஆல்டிரின் சேவியரை கப்பலில் இருந்து காணவில்லை என கைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளன. ஆல்ட்டிரின் சேவியர் எப்படி காணாமல்போனார். கப்பலில் இருந்து எங்கு போனார். அவருக்கு என்ன ஆகியது என்ற விபரம் எதுவும் சொல்லவில்லை எனவே எனது மகனை கண்டுபிடித்துத் தறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமிபதியிடம் காணமல் போன வாலிபர் ஆல்ட் டிரின் சேவியர் தகப்பனர் சேவியர்  கண்ணீர்மல்க மனுக் கொடுத்தார்.


மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமிபதி தந்தை சேவியர். மற்றும் குடும்பத்தினருக்கு உங்களது மகனை கண்டுபிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறினார். கப்பலுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயமானது குறித்து மீனவர்கள் சோகத்தில் உள்ளனர்.


- MT. அந்தோணி ராஜா

தமிழக குரல்

திருச்செந்தூர் தாலூகா செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad