சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக செயலர், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கனிமொழி எம்பி இப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது மக்களுடன் தங்கி மக்கள் பணியாற்றினார்.
அதன்மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பியை சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்., எதிர்த்து போட்டியிடும் அதிமுக, பாஜ வேட்பாளர்களை டெப்பாசிட் இழக்க செய்ய வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் நன்கு களபணியாற்றிட வேண்டும். செயல்படாத நிர்வாகிகள் உடனடியாக மாற்றப்படுவார்கள். தூத்துக்குடி தொகுதியில் பல தொழிற்சாலைகள் கொண்டு வரப்ப்பட்டுள்ளன. முன்பு இங்குள்ளவர்கள் சென்னை, கோவைக்கு சென்று தான் பணிபுரிய வேண்டும் என நிலை இருந்தது.
இப்போது சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர்களும் தூத்துக்குடி தொகுதியில் வந்து வேலை பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. ஆதலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிட வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஜோசப். ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி , பேரூராட்சித் தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலர் ,மகா.இளங்கோ வரவேற்றார். இதில் மாநில வர்த்தக பிரிவு துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட பிரதிநிதிகள் இ. ஸ்டான்லி,லெ. சரவணன், பாலசிங், ஒன்றிய அவைத்தலைவர் பால் துரை, ஒன்றிய துணைச் செயலர்கள் ஜாக்குலின், கிருஷ்ணகுமார்., நகர துணைச் செயலர்கள் மணிகண்டன், வெள்ளப்பாண்டி, நகர பொருளாளர் சந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தர், ஜான்சிராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல் சமது, நகர அமைப்பாளர் முகம்மது இஸ்மாயில், நகர மகளிரணி அமைப்பாளர் ஜோதி உள்ளிட்ட கிளை, நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி வேல்துரை நன்றி கூறினார்.
- நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment