சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ராணிபேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தீனதயாளன் என்பவர் தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களையும் கடுமையாக மிரட்டுவது, கடும் சொற்களால் அவமதிப்பதும், சுய லாபத்திற்காக விதிமுறைகளுக்கு புறம்பாக வட்டார நிர்வாகத்தை செயல்பட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை சாத்தான்குளம் வட்டத் தலைவர் ஜான்ரவி தலைமை வகித்தார். இதில் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்க செயலர் கோமதி நன்றி கூறினார்.
- நிக்சன், செய்தியாளர்.

No comments:
Post a Comment