அதன்படி இன்று (07.03.2024) கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏசியா பார்ம்ஸ் நிறுவன ஊழியர்களிடமும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவிகளிடமும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி சூசைராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரையில் பகுதியில் பொதுமக்களிடமும், சமூக நீதி மற்றும் உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் . அங்காள ஈஸ்வரி மற்றும் போலீசார் புதுக்கோட்டை பெரியநாயகிபுரம் பகுதியில் பொதுமக்களிடமும்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் காவல் உதவி செயலி குறித்து "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 3887 "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,21,990 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment