காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு திருவாராதனம். பின்னர் 12 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி தலைமையில் சீனிவாசன்,சேது,சம்பத், பட்சி ராஜன் நரசிம்மன் திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன்,கெருடப்பன். ஆகியோர் சேவித்தனர். பின்னர் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6.30மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு எம் இடர் கடிவான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி அர்ச்சகர்கள் கண்ணன், ரகு, சுந்தரராஜன், ராஜகோபாலன் ஆகியோர் கருட வாகனத்தில் அலங்காரம் செய்திருந்தனர். 8 30 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடு ஆகி மாட வீதி. மற்றும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி,சீனிவாசன். தேவராஜன், கண்ணன், அறங்காவல்குழு உறுப்பினர்கள் முருகன் முத்துகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் தமிழ்ச் செல்வி ஆய்வாளர் நம்பி டாக்டர் கோகுல் சீனிவாச அறக்கட்டளை சூப்பர்வைசர்கள் பரகாலசிங்கன். பாலாஜிஆகியோர் கலந்து கொண்டனர்.
நவதிருப்பதி கோவில்களில் இரண்டாவது கோயில் நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலாகும், மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று கருட சேவை நடந்தது. கடந்த மார்ச் 3ந் தேதி நத்தம் கோயிலில் கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது.

No comments:
Post a Comment