தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் சக்திவிக்னேஷ் (32) என்பவரது வீட்டிற்குள் நேற்று (06.03.2024) தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் மயிலன் (32) என்பவர் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அங்கு இருந்த இரும்பு பொருட்களை திருட முயற்சித்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் இருந்த சக்திவிக்னேஷ் மற்றும் பக்கத்தில் உள்ளவர்கள் சேர்ந்து மேற்படி மயிலனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதுகுறித்து சக்திவிக்னேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன் வழக்குபதிவு செய்து மயிலனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மயிலன் மீது ஏற்கனவே மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment