நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மூலம் கடம்பாகுளம் பாசன வாய்க்கால்கள் மடை எண் 4,6,7,8,9,தூர் வாரும் பணி! சகோ.கிளமென்ட் எப னேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 March 2024

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மூலம் கடம்பாகுளம் பாசன வாய்க்கால்கள் மடை எண் 4,6,7,8,9,தூர் வாரும் பணி! சகோ.கிளமென்ட் எப னேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மூலம் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடம்பாகுளம் பாசனவாய்க் கால்கள் மடை எண் 4,6,7,8,9 ஆகியவற்றை தூர் வாரும் பணியை சகோ.கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மூலம் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடம்பாகுளம் பாசனவாய்க் கால்கள் மடை எண் 4,6,7,8,9 ஆகியவற்றை தூர் வாரும் பணி துவங்கியது. இந்நிகழ்விற்கு கடம்பாகு ளம் நீரினைப் பயன்படுத்து வோர் சங்கத் தலைவர் டி. டி. குணா தலைமை வகித்தார். புறையூர் தம்பிரான், குருகாட்டூர் யோசுவா, மேல கடம்பா சுதா, மணத்தி பாஸ்கரன், குட்டித்தோட்டம் நடராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


சகோ.கிளமென்ட் எபனேசர் ஜெபம் செய்து தூர் வாரும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், முத்து, மாசானமுத்து, மூக்காண்டி, சமுத்திரம், பரமசிவன், அண்ணாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். பாசன வாய்க்கால்கள் 17 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப் படுகிறது.1500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றது.


புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, குருகாட்டூர், மேலக்கடம்பா, ராஜாங்கபுரம், கோட்டூர், குட்டக்கரை ஆகிய கிராமங்கள் இதன் மூலம் பயன் பெறுகிறது. 


- நாசரேத் நிக்சன், செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad