மாசி திருவிழா கடந்த 20ம் தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடி எற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள் தினசரி காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.
இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணி அளவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஆச்சாரிய குருக்கள், மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து கோவிந்தா கோபாலா, கோவிந்தா கோபாலா என கரகோஷத்துடன் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது.
நாளை 29ம் தேதி இரவு சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச்1 ம்தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச் 2ம் தேதி மதியம் தீர்த்தவாரி . தேரோட்ட நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மாசாணமுத்து, குற்றவியல் நீதிபதி மகராஜன், கோவில் செயல் அதிகாரி தமிழ்ச்செல்வி, திமுக நகர செயலாளர் கோபிநாத், முன்னாள் நகர திமுக செயலாளர் முத்து ராமலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் ( எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன், செந்தில் குமார், காளிமுத்து, ராம லட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment