இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் திமுகவினர் வீடு வீடாக விநியோகம் செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 February 2024

இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் திமுகவினர் வீடு வீடாக விநியோகம் செய்தனர்.


பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிக்களையும் முந்திக்கொண்டு திமுக தீவிர தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளது. அதன்படி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகளடங்கிய துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. 

சாத்தான்குளம் ஒன்றியத்தில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப் 10வது வார்டில் தொடங்கி வைத்தார். இதில் நகர திமுக செயலாளர் துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சரவணன், வார்டு செயலாளர் கிதர் முஹம்மது, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முருகன், சிறுபான்மை அணி ஒன்றிய அமைப்பாளர் அப்துல் சமது, இஸ்மாயில், ஒன்றிய பிரதிநிதி குருசாமி மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad