தமிழக மீனவர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாரத பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சாத்தான்குளம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு வைத்து கையில் கருப்புக் கொடியேந்தி தூத்துக்குடி மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பெரியதாழை சுரேஷ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன், சாத்தான்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துவேல், சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பிரபு கிருபாகரன், ஆழ்வார் மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஆழ்வார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் பிரபு, சாத்தான்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, சாத்தான்குளம் ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் குருசாமி, முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மளவராயநத்தம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள், சாத்தான்குளம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி ஜோசப், ஆத்திக்காடு முத்துராஜ், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், சிவா, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாநில செயலாளர் ராஜகுமாரன், சாத்தான்குளம் வடக்கு வட்டாரத் காங்கிரஸ் துணைத் தலைவர் நல்லதம்பி, முதலூர் ஜான்ராஜ், நெல்லை மாநகர காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், புத்தன் தருவை மணி, செட்டிவிளை செல்வகுமார், செட்டிவிளை லாரன்ஸ், இளையநேரி பால்ராஜ், டிகேசிநகர் வேம்பரசு, ஆனந்தபுரம் செல்லத்துரை, அம்புரோஸ், முதலூர் சாலமோன், நாராயணன், செல்வகுமார், நொச்சிகுளம் கிளிண்டன், செட்டிகுளம் முத்துக்குமார், கொழுந்தட்டு வசுமதி ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment