சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்பட்ட 23 இடங்களில் மார்ச் 3ஆம்தேதி 5வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விநியோகிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து விநியோகிக்கும் பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கிரண்ராஜ்., பிருந்தா ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் வரவேற்றார். இதில் மருத்துவமனை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா, டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் 60பேர்கள் கலந்து கொண்டனர். போலியோ சொட்டு மருந்து முகாமை அமைப்பது. மருந்து விநியோகிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பகுதியில் சுமார் 1000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment