சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 27 February 2024

சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம்.


சாத்தான்குளம்  அருகே  சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நலம், ஆண்களுக்கான நவீன கருத்தடை  மற்றும் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு  ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் சுமதி  தலைமை வகித்தார். 

வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன்,  ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் ஸ்ரீதர்,  முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவளர் கிரன்ராஜ் வரவேற்றார்.  இதில்  மக்கள் கல்வி தகவலர் மோகனரங்கம், மக்கள் குடும்ப நலம்,  ஆண்களுக்கான நவீன் கருத்தடை, சிறு குடும்ப நலன்  குறித்தும்., மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர். 


இதில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள அதிகாரி,  சுவேதா, பணியாளர் இசக்கிமுத்து,  வட்டார நல புள்ளியியல் அலுவலர் நளயாயினி,  வட்டார  நல அலுவலர் கலையரசி,  தியாகராஜன், ஜான், ஞானராஜ். திருவடிவாசன்,  அணிஸ் உள்ளிட்ட டெங்கு, ஆஷா, பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் புதையிலை பாதிப்பு. குடும்ப நலம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 


இதில் மருத்துவர் சந்திரியா, நர்சு பீல்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்  சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் நன்றி கூறினார். . தொடர்ந்து  இணை இயக்குநரின் நேர் முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் பேய்க்குளம் கடைகளில் ஆய்வு  செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad