சாத்தான்குளம் அருகே அதிக பாரத்துடன் ஜல்லி ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்துஅதனை ஒட்டி வந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி பகுதியில் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவரங்கநேரி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. நவீன்எபிராஜ் என்பவர் அந்தப் பகுதியில் லாரியில் அரசின் எந்தவித அனுமதி சீட்டுமின்றி லாரியில் ஜல்லி கற்களை விதிகளை மீறி அளவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரோந்து பணியில் இருந்த வட்டாட்சியர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தமிழக அரசின் எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ. ரத்தினராஜ், வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் என்பவரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment