திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் 4 பயணிகள் ரயில் நாளை 29.02.2024 ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 February 2024

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் 4 பயணிகள் ரயில் நாளை 29.02.2024 ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு.

திருநெல்வேலி, பிப்.28, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் இடையே - ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் மாற்றம் அறிவித்துள்ளது.


அதன்படி, 
29.02.2024 அன்று காலை 7:20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வண்டி எண் 06405 பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06675 பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வாஞ்சி மணியாச்சியிலிருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் 06848, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, திருச்செந்தூரிலிருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06678, ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


இத்தகவல் தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad