தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்தில் ரிசர்வேஷன்
டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதி.
கடந்த இரு நாட்களாக ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு வழக்கம் போல ரிசர்வேஷன் கவுண்டர் முன்பு வரிசையில் பயணிகள் நிற்க தொடங்கினர்.
ஆனால் இரண்டு நாட்களும் டிக்கெட் பதிவு செய்யும் மெஷினில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிக்கெட் கொடுக்க முடியாமல் போகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். இதனால் தங்களது பயண தேதியை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர கதியில் வெளியூர் செல்ல முற்படுவோர் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். இது குறித்து தென்னக இரயில்வே வணிக இயக்குநருக்கு புகார் அனுப்பியும் எவ்வித பயனும் இல்லை. இந்நிலை மேலும் தொடர்ந்தால் ரிசர்வேஷன் டிக்கெட் கொடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டு வருவாய் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment