தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி ரூ.25.5 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.68 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 December 2023

தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி ரூ.25.5 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.68 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  ரூ.25.5 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.68 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் இன்று (01.12.2023) ரூ.25.5 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள். மேலும், ரூ.1.68 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள்.


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் ஒன்றியம் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் நாசரேத் பேரூராட்சி வியாபாரிகள் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் ஆகியவற்றை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு மீன்வனம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று டிச. 01. திறந்து வைத்தார்.


மேலும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறுமுகநேரி பேரூராட்சி பெருமாள்புரத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காயல்பட்டினம் நகராட்சி அருணாச்சலபுரத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தேசிய துவக்கப்பள்ளி கட்டிடம், காயல்பட்டினம் நகராட்சி எல்.ஆர்.நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் லெட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காடு பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சி.பா. ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் நாசரேத் பேருந்து நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளம் ஆகிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.


நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, நாசரேத் பேரூராட்சித் தலைவர் நிர்மலா ரவி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad