தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் - ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்புடனும் இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 3 December 2023

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் - ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்புடனும் இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.

தாமிரபரணி ஆற்றில் 5340 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவிப்பில் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 5340 கன அடி கொள்ளளவு நீர் இன்று (03.12.2023) வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டுகளில் அதிக அளவு நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு செல்ல வேண்டாம். மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி,  கேட்டுகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad