தூத்துக்குடி - புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 December 2023

தூத்துக்குடி - புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், டிச.01, தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது - ரூபாய் 9,000/- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று (30.11.2023) தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் இசக்கிராஜா (32) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரி இசக்கிராஜாவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 9,000/- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad