தூத்துக்குடி - அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 22,000/- பணம் திருட்டு - ஒருவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 December 2023

தூத்துக்குடி - அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 22,000/- பணம் திருட்டு - ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், டிச.01, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியவர் கைது - ரூபாய் 5800/- பணம் பறிமுதல்.


தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்பவரது மனைவி தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 29.11.2023 அன்று மேற்படி அழகு நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ரூபாய் 22,000/- பணம் திருடுபோயுள்ளது.


இதுகுறித்து ராஜபிரபுவின் மனைவி நேற்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேல தட்டாப்பறை வடக்கு தெருவைச் சேர்ந்த மருதன் மகன் சுடலைமணி (53) என்பவர் மேற்படி அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கியப்பன் எதிரி சுடலைமணியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சுடலைமணி மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad