தூத்துக்குடி - பெண்ணிடம் தங்கநகையை பறித்து சென்றவர் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்பிலான 5 சவரன் தங்க நகை மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 December 2023

தூத்துக்குடி - பெண்ணிடம் தங்கநகையை பறித்து சென்றவர் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்பிலான 5 சவரன் தங்க நகை மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம், டிச. 01, தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் தங்கநகையை பறித்து சென்றவர் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்பிலான 5 சவரன் தங்க நகை மீட்பு.


தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சாமி மனைவி பாப்பா (64) என்பவர் நேற்று (30.11.2023) தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.சவேரியார்புரம் சமுதாயகூடம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு சைக்கிளில் வந்த மர்ம நபர் மேற்படி பாப்பா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.


இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் மரியஇருதயம், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் முதல் நிலை காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன் (42) என்பவர் மேற்படி பாப்பாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் வழக்குபதிவு செய்து எதிரி ஜேசுபாலனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 5 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad