தூத்துக்குடி மாவட்டம், நவ.30, தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது - ரூபாய் 70,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1240/- பணம் மீட்பு.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தன் காலனி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் லெட்சுமணன் (40) என்பவர் நேற்று (29.11.2023) இரவு அவரது வீட்டிற்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1500/- பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து லெட்சுமணன் இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) மற்றும் தூத்துக்குடி பி.என்.டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார் (19) ஆகிய இருவரும் லெட்சுமணன் வீட்டுக்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் எதிரிகளான சரவணன் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 70,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூபாய் 1240/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சரவணன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 13 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் என மொத்தம் 15 வழக்குகளும், எதிரி புவனேஷ்குமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment