திருச்செந்தூர் முருகன் கோவிலில் மின்சாரம் தாக்கி பக்தர் ஒருவர் பலி: கோவில் நிர்வாகத்தின் அலட்சியம்- தந்தை புகார்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 November 2023

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மின்சாரம் தாக்கி பக்தர் ஒருவர் பலி: கோவில் நிர்வாகத்தின் அலட்சியம்- தந்தை புகார்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரை புறக்காவல் நிலையம் பகுதியில் உள்ள  மின் எர்த் பைப்பில் மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ். இவரது குடும்பத்தினர் உறவினர்கள் என  7 பேர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு  தரிசனம் செய்ய வந்துள்ளனர். இவர்கள் இன்று பகலில் கோயில் கடலில் புனித நீராடினர். கடலில் குளித்து முடித்து விட்டு ஜோதிபாஸ் மகன் பிரசாத் (22),  புறக்காவல் நிலையம் அருகே அமர்ந்துள்ளார். 


அப்போது புறக்காவல் நிலையம் சைடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் எர்த் பைப்பில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராமல் பிரசாத் மீது மின்சாரம் தாக்கியது.  அவரை காப்பாற்ற சென்ற தந்தை ஜோதிபாஸ் மீதும் லேசாக மின்சாரம் தாக்கியது. இதற்கிடையே அங்கிருந்து பக்தர்கள்  பிரசாத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்ததாக அவரது தந்தை ஜோதிபாசு குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad