தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்த நகர்மன்ற தலைவி - கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 November 2023

தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்த நகர்மன்ற தலைவி - கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம்.

செங்கோட்டை நகர மன்ற கூட்டமானது இன்று நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களின் திமுகவை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் அதிமுக.பா.ஜ.க உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


இந்த நிலையில், கூட்டத்தின் போது 14 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கூட்டத்தை புறக்கணித்து நகர்மன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த மற்ற கவுன்சிலர்களிடம் தீர்மானம் நிறைவேறியதாக கையெழுத்து கேட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து14 கவுன்சிலர்கள் செங்கோட்டை நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

குறிப்பாக, உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமலே, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள், ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்க முயன்றுள்ளனர். அப்போது, நகராட்சி கமிஷனர் அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டார் இதற்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்பு, அறையில் இருந்த மற்ற ஊழியர்களும் வெளியே செல்ல முயற்சி செய்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் அறை கதவை பூட்டி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தகவல் கிடைத்ததும் எம் எல் ஏ கிருஷ்ண முரளி நகராட்சி அலுவலத்திற்கு விரைந்து வந்து நகர சபை தலைவர் ராமலெட்சுமிடம் பேசினார்.  இதையடுத்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். 


இச்சம்பவதாதால் நகராட்சி வளாகத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad