தூத்துக்குடி, மத நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்மைல் பல்சமய இயக்கம் மற்றும் தூத்துக்குடி மறை மாவட்ட பல்சமய உரையாடல் மன்றம் சார்பில் பல்சமய தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் விழா ஆரம்பமானது.
ஸ்மைல் பல்சமய இயக்க இயக்குநர் ஆல்பர்ட் சேவியர் வரவேற்புரை நல்கினார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் எம்பவர் இந்தியா கௌரவ செயலருமான ஆ.சங்கர் பல் சமய தீபாவளி பண்டிகை குறித்து சிறப்புரையாற்றினார்.
செயின்ட் மேரிஸ் கல்லூரி பேராசிரியை முனைவர் எழிலரசி, அப்துல் ஆலிம், சம்சுதீன், மற்றும் தங்கம் ஆகியோர் தீபாவளி பண்டிகை தின பகிர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை பள்ளி மாணவர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நற்செய்தி நடுவ இயக்குநர் அருட்தந்தை ஸ்டார்வின் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியர் மோகன் தொகுத்து வழங்கினார். இறுதியாக பல் சமய கொள்கைப் பாடல் பாடப்பட்டு பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டு இவ்விழா நிறைவு செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment