மேலக்கரந்தை - ரூபாய் 1,14,000/- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது - ரொக்கப்பணம் ரூ. 32,000/- பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 November 2023

மேலக்கரந்தை - ரூபாய் 1,14,000/- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது - ரொக்கப்பணம் ரூ. 32,000/- பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - ரூபாய் 1,14,000/- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 32,000/- ரொக்கப்பணம் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி விளாத்திகுளம்  காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் மாசார்பட்டி  காவல் நிலைய ஆய்வாளர் அனிதா மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆகியோர் இன்று (09.11.2023) மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை பகுதியில் உள்ள ராமசாமி மகன் மாரிராஜ் (40) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 


மேலும் மேற்படி போலீசார் மாரிராஜிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மேலக்கரந்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் சாக்கு மூடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் மாரிராஜை கைது செய்து அவரிடமிருந்த மொத்தம் ரூபாய் 1,14,000/- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்களையும், ரூபாய் 32,000/- ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad