திருநெல்வேலி - போதிய பேருந்து வசதி இருந்தும் பேருந்தில் தொங்கியபடி செல்லும் பள்ளி மாணவர்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 November 2023

திருநெல்வேலி - போதிய பேருந்து வசதி இருந்தும் பேருந்தில் தொங்கியபடி செல்லும் பள்ளி மாணவர்கள்.

திருநெல்வேலி, நவ 10, திருநெல்வேலி முருகன்குறிச்சி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவ்வழியே வண்ணார்பேட்டை செல்லும் பேருந்துகளில் படியில் தொங்கியபடி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்புக்கு போதிய பேருந்து வசதிகள் உள்ளன. இருப்பினும், திருநெல்வேலியில் இயங்கும் அனைத்து அரசு நகர பேருந்துகளிலும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து கட்டணமில்லா சேவையை பயன்படுத்திக்கொள்ள அரசாணை இருந்தும், ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


மேலும், தினசரி இப்பகுதியில் இச்சம்பவங்கள் வாடிக்கையாக நடந்து வருவதாகவும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் வரை யாரும் இதனை கண்டு கொள்வதும் இல்லை என்றும் நேரிடையாக இக்காட்சிகளை பார்த்த சிலர்  கூறினர். இம்மாணவர்களை கண்டிக்காவிட்டால் விபத்து ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


போக்குவரத்து காவலர்களும், அரசும் தவிர யார் இதனை சரி செய்வார்கள்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சமூக ஆர்வலர்கள்..

No comments:

Post a Comment

Post Top Ad