தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் கட்டுமான பொருட்கள் குவிப்பு : மாணவ, மாணவிகள் அவதி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 November 2023

தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் கட்டுமான பொருட்கள் குவிப்பு : மாணவ, மாணவிகள் அவதி!


தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடியில் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜல்லி, மணல், கலவை எந்திரம், இரும்பு கம்பி போன்ற  கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். மேலும் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் பள்ளி முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. கட்டுமானப் பொருட்களால் மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கான மைதானம், பாதையை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் போக்குவரத்துக்கு தடுமாறுகிறார்கள். பாதுகாப்பு ஆயத்தமின்றி மழையில் வேலை செய்வதை தவிர்த்து பள்ளி விடுமுறை மற்றும் வெயில் நாட்களில் பணியை மேற்கொள்ள வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் காேரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad