நாசரேத் - சாலமோன் பள்ளியில் தீபாவளி நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 November 2023

நாசரேத் - சாலமோன் பள்ளியில் தீபாவளி நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், சாலமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் தீபாவளியைப்பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி கனகராஜ் தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணத்தின் விளக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 



பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது பற்றி பேசினர். மாணவர்கள் மிக உற்சாகத்துசனும் பாதுகாப்புடனும் பட்டாசு & மத்தாப்பு வெடித்து மகிழ்ந்தனர். இறுதியில் உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி உரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad