திருச்செந்தூர் - இருசக்கர வாகனம் திருட்டு 3 பேர் கைது - ரூ 60,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 November 2023

திருச்செந்தூர் - இருசக்கர வாகனம் திருட்டு 3 பேர் கைது - ரூ 60,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரைச் சேர்ந்த மோகன் மகன் சுவாதிஸ்வரன் (24) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 09.11.2023 அன்று இரவு தனது வீட்டு முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.


இதுகுறித்து சுவாதிஸ்வரன் நேற்று அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் கந்தசிவா (20), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மாணிக்கம் மகன் செல்வராஜ் (22) மற்றும் தூத்துக்குடி பவிஸ்ரீ நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் செல்வபெருமாள் (எ) கட்ட பெருமாள் (22) ஆகியோர் மேற்படி சுவாதிஸ்வரன் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இந்துசூடன் மற்றும் போலீசார் மேற்படி எதிரிகளான கந்தசிவா, செல்வராஜ் மற்றும் செல்வபெருமாள் (எ) கட்ட பெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 60,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட கந்தசிவா மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 2 வழக்குகளும், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 8 வழக்குகளும், எதிரி செல்வராஜ் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், சாயர்புரம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தலா ஒரு திருட்டு வழக்கும் என 8 வழக்குகளும், எதிரி செல்வபெருமாள் (எ) கட்டப் பெருமாள் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad