திருமறையூரில் லயன்ஸ் தீபாவளி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 12 November 2023

திருமறையூரில் லயன்ஸ் தீபாவளி கொண்டாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், திருமறையூர் பகுதியில் நாசரேத் டவர் லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.


திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம் மற்றும் உறைவிட பள்ளியில் சுமார் 45 மாணவர்கள் உள்ளனர் அவர்களுக்கு நாசரேத் டவர் லயன்ஸ் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறினர்.


பின்பு அதை தொடர்ந்து முதியோர் இல்லத்தில் இருக்கும் சுமார் 30 பேருக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களுடன் வாழ்த்து கூறினர்.


இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை 324A மாவட்டத்தின் தேவதாரு வட்டார தலைவர் லயன் ஆரோக்கியபழம், நாசரேத் டவர் லயன்ஸ் சங்கம் தலைவர் அகிலன், லயன் தேவதாஸ், லயன் சரண் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad