விளாத்திகுளம் - பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 November 2023

விளாத்திகுளம் - பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல் மாந்தை கிராமத்தில் கடற்கரை சாலையில் உள்ள பழனிச்சாமி என்பவர் இல்லத்தில் தந்தை பெரியார் முழு உருவ சிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.


விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். சிலை அமைய காரணமாக இருந்த பெரியார் தொண்டர் பெ.காலாடி - ன் உருவப் படத்தை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்.


விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், பெரியார் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க பெண்களுக்கு கல்வி முக்கியம் எனவே கரண்டியை தூக்கி எரி புத்தகத்தை எடுத்து படி என்று கூறி பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்டார் மற்றும் மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை என பெரியார் கூறிய அனைத்தும் தற்பொழுது சட்டத்தில் நடைமுறையில் உள்ளது என்று பேசினார். இந்நிகழ்வில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad