திருச்செந்தூர் - இருசக்கர வாகனத்தில் சாகசம் அதை சமூக வலை தளதளங்களில் பதிவிட்டவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 12 November 2023

திருச்செந்தூர் - இருசக்கர வாகனத்தில் சாகசம் அதை சமூக வலை தளதளங்களில் பதிவிட்டவர் கைது.

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலை தளதளங்களில் பதிவிட்டவர் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி சந்திப்பு பகுதியில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து நேற்று திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பரமன்குறிச்சி அரங்கன்விளை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் டைட்டஸ் டேனியல் (20) என்பவர் மேற்படி சம்பவ இடத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.


இதனையடுத்து உடனடியாக திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிறிஸ்துராஜ் எதிரி டைட்டஸ் டேனியலை கைது செய்து சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad