ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியருக்கு பிரிவுபசார விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியருக்கு பிரிவுபசார விழா.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் 27 வருடங்களாக ஆசிரியராக மில்டன் பணி புரிந்து வந்தவர் சீனியர் அசிஸ்டன்ட் ஆசிரியர் மில்டன். அவர் ஓய்வு பெறும் வயதை எட்டியதால், அவருக்கு கல்லூரி சார்பில் பிரிவுபசார விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது.


அவரின் சேவையை பாராட்டி கல்லூரி தாளளரும் தூத்துக்குடி நாசரேத் திறுமண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் முன்னிலையில் கவுரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினர். ஓய்வு பெறும் சீனியர் அசிஸ்டன்ட் ஆசிரியர் மில்டன் நல்லதொரு வாழ்க்கையில் ஆண்டாண்டு செலவிடவும், இறைபணியில் காலம் கழிக்கவும் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். முடிவில் சீனியர் அசிஸ்டன்ட் ஆசிரியர் மில்டன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad