தென்காசியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

தென்காசியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

தென்காசி மாவட்டம், தென்காசியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது, இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ், டீ-சர்ட், மரக்கன்று வழங்கப்படும் என பேரணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் விலைமதிப்பில்லா மனித உயிர்கள் புற்றுநோய்க்கு இரையாகி வருகின்றன. கேன்சரை பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமாக புற்றுநோயை எளிதாக குணப்படுத்த முடியும். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகத் தான், பசுமை வலசை தென்காசி சங்கம் மற்றும் Tenkasi Life சார்பில் 'புற்றுநோய் இல்லா தென்காசி' எனும் பேரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, வரும் நவம்பர் 5ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. 


இந்த பேரணி ஆனது, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நிறைவடைகிறது. இந்த பேரணியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம். விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் நவம்பர் 2ஆம் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம். பேரணியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ், டீ-சர்ட், மரக்கன்று, ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.  


புற்றுநோய் இல்லா தென்காசியை உருவாக்குவோம்; விலைமதிப்பில்லா உயிர்களை காப்போம். பதிவு செய்ய: https://tinyurl.com/cancerfreetenkasi

மேலும் விவரங்களுக்கு: 7010379995, 8148210093, 9840285585.

No comments:

Post a Comment

Post Top Ad