தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் 'தேசிய ஒற்றுமை நாள்" உறுதிமொழி எடுக்ககபட்டது.


ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு (31.10.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


'இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்." என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்த உறுதிமொழியில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad