தூத்துக்குடி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் கடுங்காவல் மற்றும் 6 மாதம் மெய்க்காவல் சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

தூத்துக்குடி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் கடுங்காவல் மற்றும் 6 மாதம் மெய்க்காவல் சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு ரூபாய் 7,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாரிக் (எ) முகமது நசீர் (24) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 10.03.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் (31.10.2023 அன்று) குற்றவாளியான முகமது தாரிக் (எ) முகமது நசீர் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 7,000/- அபராதமும் விதித்து  ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
 

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad